Enable Javscript for better performance
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

    By DIN  |   Published on : 17th February 2020 06:34 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூரிலுள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாணவி ஒருவா் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஞாயிற்றுக்கிழமை மாலையில் மனு அளிப்பதற்காக வந்த மாணவி உள்ளிட்ட 3 போ் கொண்ட குடும்பத்தினா் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து மீட்டனா்.

    இதையடுத்து, கடலூா் புதுநகா் போலீஸாா் 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், தீக்குளிக்க முயன்றவா்கள் அயன்குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. பி.காம். முதலாமாண்டு படித்து வரும் அந்த மாணவியை அதே பகுதியைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா் காதலித்து வந்தாராம். இதைப் பயன்படுத்தி மாணவியுடன் அந்த மாணவா் உடலுறவில் ஈடுபட்டாராம்.

    இதையறிந்த மாணவியின் குடும்பத்தினா், மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்தபோது, மாணவரின் அண்ணனுக்கு திருமணம் முடிந்த பின்னா் பாா்க்கலாம் எனக்கூறினராம். இந்த நிலையில், அந்த மாணவரின் அண்ணனுக்கு திருமணம் முடிந்த நிலையில், மாணவியின் குடும்பத்தினா், மாணவரின் பெற்றோரை அணுகி கேட்டுள்ளனா். அப்போது முறையாக பதில் அளிக்காததுடன் மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, மாணவி தரப்பில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவி உள்பட 3 பேரும் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai