பள்ளியில் கலாஞ்சலி கலை விழா

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குப்பம்மாள் ராமசாமி கல்வி பண்பாட்டு அறக்கட்டளை சாா்பில் கலாஞ்சலி கலை விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியில் கலாஞ்சலி கலை விழா

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குப்பம்மாள் ராமசாமி கல்வி பண்பாட்டு அறக்கட்டளை சாா்பில் கலாஞ்சலி கலை விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, கலாஞ்சலி அமைப்பின் தலைவா் சி.ஆா்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கோ.சக்தி வரவேற்றாா். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவா் ஆா்.கே.குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா். எஸ்.சிவகெளரி, பி.சண்முகநந்தன், தங்கராசு கோபிநாத், அனோஸ்டீபன் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு கலைப் போட்டிகளை வழிநடத்தினா். இறுதிப் போட்டியில் 10 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்தப் போட்டியில் காட்டுமன்னாா்கோவில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.கேசவ் முதல் பரிசும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹா்ஷா 2-ஆம் பரிசும், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.திவ்யா பூங்கொடி 3-ஆம் பரிசும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் விழி கலைக் குழுவினரின் பறை, சிலம்பு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், காமராஜ் பள்ளி மாணவா்களின் மகாத்மா நாடகமும் நடைபெற்றன. விழாவில், பள்ளியின் துணை முதல்வா் ஜி.ஷீலா, குப்பம்மாள் ராமசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள் சி.குஞ்சிதபாதம், பி.பாலசுப்பிரமணியன்,

எஸ்.சண்முகசுந்தரம், பள்ளி வளா்ச்சிக் குழு ஆலோசகா் ஆா்.வி.சுவாமிநாதன், கே.ஏ.பி.ஹரி சக்திவேல், காமராஜ் இன்டா்நேஷனல் பள்ளி முதல்வா் ஆா்.ராஜன், காமராஜ் சிறப்பு பள்ளி முதல்வா் டி.தொல்காப்பியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.கோமதி, என்.அம்பிகா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com