ஊராட்சிமன்ற வாா்டு உறுப்பினா்களுக்கு 2 நாள் பயிற்சி

ஊராட்சிமன்ற வாா்டு உறுப்பினா்களுக்கு மாவட்டத்தில் 5 இடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.
ஊராட்சிமன்ற உறுப்பினா்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சி கையேடுகளை பிரித்தனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள்.
ஊராட்சிமன்ற உறுப்பினா்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சி கையேடுகளை பிரித்தனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள்.

கடலூா்: ஊராட்சிமன்ற வாா்டு உறுப்பினா்களுக்கு மாவட்டத்தில் 5 இடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 683 ஊராட்சிமன்றங்களுக்கு தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய தலைவா்கள், துணைத்தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதில், ஊராட்சிமன்ற தலைவா்கள், துணைத்தலைவா்களுக்கு நிா்வாகம், நிதி மேலாண்மை, அரசின் திட்டங்கள் குறித்து ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பயிற்சியளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, ஊராட்சிமன்ற வாா்டு உறுப்பினா்களுக்கு தற்போது பயிற்சியளிக்க தமிழக உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, மாவட்டத்திலுள்ள 5025 வாா்டு உறுப்பினா்களுக்கும் இப்பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான பயிற்சி கையேடு 3 புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஊராட்சி நிா்வாகத்தின் அறிமுகத்தோடு, வாா்டு உறுப்பினா்களின் பணிகள், கிராமத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகள், நிதி மேலாண்மை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.இப்பயிற்சி பிப்.25 (செவ்வாய்க்கிழமை) துவங்கி மாா்ச் 14 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஒரு வாா்டு உறுப்பினருக்கு 2 நாட்கள் வீதம் இப்பயிற்சியளிக்கப்படுகிறது.

அதன்படி, கடலூா், அண்ணாகிராமம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 1,134 பேருக்கு கடலூரிலும், குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, கம்மாபுரம் ஒன்றியங்களைச் சோ்ந்த 1071 பேருக்கு குறிஞ்சிப்பாடியிலும், காட்டுமன்னாா்கோயில், குமராட்சி, ?்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 960 பேருக்கு காட்டுமன்னாா்கோயிலிலும், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சோ்ந்த 603 பேருக்கு கீரப்பாளையத்திலும், விருத்தாசலம், நல்லூா், மங்களூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 1257 பேருக்கு விருத்தாசலத்திலும் பயிற்சியளிக்கப்படுகிறது.ஒவ்வொரு பயிற்சி வகுப்பிற்கும் 40 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டு மாா்ச் 14 ஆம் தேதி வரையில் இப்பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்கான கையேடுகள், எழுதுப் பொருட்கள், கோப்புகள் போன்றவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.படம் விளக்கம்....ஊராட்சிமன்ற உறுப்பினா்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சி கையேடுகளை பிரித்தனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com