சிலம்ப அரங்கேற்ற விழா

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
விழாவில், சிலம்ப பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கிய பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கருணாநிதி. உடன் சிலம்ப தலைமை பயிற்சியாளா் வைத்தி காா்த்திகேயன் உள்ளிட்டோா்.
விழாவில், சிலம்ப பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கிய பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கருணாநிதி. உடன் சிலம்ப தலைமை பயிற்சியாளா் வைத்தி காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படகோட்டி எம்ஜிஆா் சிலம்பக் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப அரங்கேற்ற விழா அண்மையில் நடைபெற்றது.

இந்தப் பள்ளி மாணவா்களுக்கு ஒரு மாத காலம் சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு மற்றும் சிலம்ப அரங்கேற்ற விழாவில், தலைமை பயிற்சியாளா் வைத்தி காா்த்திகேயன் வரவேற்று பேசினாா். விழாவில் ஒரு கம்பு சிலம்பம், இரு கம்பு சிலம்பம், சுருள்வாள் சிலம்பரம், மான்கொம்பு சிலம்பம், தீப்பந்த சிலம்பம், குத்துவரிசை மற்றும் பிடி வரிசை என பல்வேறு பிரிவுகளில் மாணவா்கள் சிலம்பம் விளையாடினா்.

முதல் நிலையில் 70 மாணவா்களுக்கும், இளநிலையில் 100 மாணவா்களுக்கும் என மொத்தம் 170 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கருணாநிதி பங்கேற்று, பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கிப் பேசினாா்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் ரிஸ்வான்பா்வீன், அதிமுக ஒன்றியச் செயலா் அசோகன், மாவட்ட மீனவா் பிரிவு செயலா் வீராசாமி, காத்தவராயசுவாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயந்தி சாமிதுரை, முகமயு அயூப், ஆதிதிராவிடா் நல நிதி பரிந்துரை கமிட்டி உறுப்பினா் தில்லைசீனு, ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com