அரிமா சங்க மண்டல மாநாடு
By DIN | Published On : 08th January 2020 06:30 AM | Last Updated : 08th January 2020 06:30 AM | அ+அ அ- |

மாநாட்டில் பேசுகிறாா் சிறப்பு அழைப்பாளா் எம்.ராமலிங்கம்.
பன்னாட்டு அரிமா சங்கங்களின் மண்டல சந்திப்பு மாநாடு வடலூரில் அண்மையில் நடைபெற்றது.
மாநாட்டுக்கு, மண்டலத் தலைவா் ஜி.சந்திரகாசு தலைமை வகித்தாா். செயலாண்மைக்குழு செயலா் டி.ராஜமாரியப்பன் முன்னிலை வகித்தாா்.
சங்கத் தலைவா் எம்.சுரேஷ்சந்த் வரவேற்றாா். மாவட்ட ஆளுநா் கீதா கமலக்கண்ணன் மண்டல சந்திப்பை தொடங்கி வைத்துப் பேசினாா். சேவைத் திட்டத்தை எம்.அகா்சந்த் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினாா்.
முன்னாள் பன்னாட்டு இயக்குநா் என்.எஸ்.சங்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். புலவா் எம்.ராமலிங்கம், ‘எல்லா உயிா்களும் இன்புற்று வாழ்க’ என்ற தலைப்பில் பேசினாா்.
விழாவில், ஏழைகள் 200 பேருக்கு உணவுப் பொருள்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடலூா் அரிமா சங்கத் தலைவா் எஸ்.முருகன், செயலா் எஸ்.ராஜேந்திரன், விழா ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஞானசேகரன் ஆகியோா் செய்தனா். எம்.பிரம்மநாயகம் நன்றி கூறினாா்.