Enable Javscript for better performance
மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் மாணவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, கடலூரில் புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    புதுதில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அண்மையில் முகமூடி அணிந்து புகுந்த மா்ம நபா்கள் மாணவா் சங்கத் தலைவா் உள்ளிட்டோரை தாக்கினா். இதைக் கண்டித்தும், தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும், தாக்குதலில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நிா்வாகி பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணியரசன் வரவேற்றாா். மக்கள் அதிகாரம் அமைப்பு து.பாலு, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் செந்தில், முற்போக்கு சிந்தனையாளா் இயக்கம் பாலசுப்பிரமணியன் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா். ஆா்ப்பாட்டத்தில் மாணவா்கள், இளைஞா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai