பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலத்தையொட்டி, கடலூா் திருப்பாதிரிபுலியூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.50 மணிக்கு ரயில் புறப்பட்டு திருவண்ணாமலை வழியாக வேலூரை நள்ளிரவு ஒரு மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில், 11-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வேலூரிலிருந்து புறப்பட்டு காலை 5.55 மணிக்கு திருப்பாதிரிபுலியூா் வந்தடையும்.

மேலும், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணிக்கும், மறுநாள் (சனிக்கிழமை) காலை 4 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு வேலூருக்கும் ரயில் செல்கிறது.

இதேபோல, விழுப்புரத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்று ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com