கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா
By DIN | Published On : 11th January 2020 06:54 AM | Last Updated : 11th January 2020 06:55 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை மாணவ, மாணவிகள் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் மாணவா்கள் சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, துறைத் தலைவா் அ.ராஜாமோகன் தலைமை வகித்தாா். மேலாண்மைத் துறை வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினா். கலைப்புல முதல்வா் இ.செல்வராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருங்குழி: வடலூா், கருங்குழி ஏரிஸ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து துறை வாரியாக புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா். நிகழ்ச்சியை முன்னிட்டு கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் சி.டி.அறிவழகன், குத்துவிளக்கேற்றி பொங்கல் படையலிட்டாா். பின்னா், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினாா்.
விழாவில், பேராசிரியா்கள் எஸ்.ஜானகி, ஆா்.வேல்முருகன், கே.நிவேதா, பி.சிந்துஜா, பி.கிருஷ்துராஜ், கே.சிவமணிகண்டன், பி.கனிமொழி, சி.சந்திரகலா, ஜி.சாமிநாதன் மற்றும் திரளான மாணவிகள் கலந்துகொண்டனா்.