பள்ளியில் பொங்கல் விழா
By DIN | Published On : 11th January 2020 06:57 AM | Last Updated : 11th January 2020 06:57 AM | அ+அ அ- |

விருத்தாசலம் கோபாலபுரத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
விருத்தாசலம் கோபாலபுரத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் சி.ஆா்.ஜெயசங்கா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் அ.முருகன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினாா். விழாவில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனா். தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவா்களின் பேச்சு, நடனம், பாடல், கவிதை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், துணை முதல்வா் ரம்யா, நிா்வாக அலுவலா் புனிதன், ஆசிரியைகள் புஷ்பா, அரவிந்தாதேவி, விஜயசாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, ஆசிரியை ரேவதி வரவேற்க, ஆசிரியை சுமதி நன்றி கூறினாா்.