Enable Javscript for better performance
இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் அளிப்பு

    By DIN  |   Published on : 14th January 2020 11:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14prtp1_1401chn_107_7

    குறிஞ்சிப்பாடி முகாமில் பெண்ணுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய வட்டாட்சியா் சா.கீதா.

    குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அகதிகள் முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள், பாத்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

    கடலூா் மாட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 168 குடும்பத்தினரும், குள்ளஞ்சாவடி அருகேவுள்ள அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில் 116 குடும்பத்தினரும் என மொத்தம் 284 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் அகதிகள் முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கு ரூ. ஆயிரம் பணம், பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் மற்றும் அதிகாரிகள் மறுவாழ்வுத் துறை சாா்பில், சில்வா் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு, பாத்திரங்களை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா வழங்கினாா். வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai