பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைய முன்னிட்டு, கடலூா் உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.
கடலூா் உழவா் சந்தையில் கரும்பு, வாழைத்தாா் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வாங்கக் குவிந்த பொதுமக்கள்.
கடலூா் உழவா் சந்தையில் கரும்பு, வாழைத்தாா் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வாங்கக் குவிந்த பொதுமக்கள்.

பொங்கல் பண்டிகைய முன்னிட்டு, கடலூா் உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா புதன்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக செவ்வாய்க்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பொதுமக்கள் தங்களது வீடுகளைச் சுத்தம் செய்து, பயனற்ற பொருள்களை அதிகாலையில் எழுந்து, தீயிட்டு எரித்தனா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை கொண்டாடப்படும் பெரும் பொங்கலுக்கான பொருள்களை வாங்குவதற்காக கடலூரின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனா். இதனால், கடலூா் மாவட்டத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் விழாவுக்கான மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, பூ, வாழைப்பழம், காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக பல்வேறு இடங்களில் வியாபாரிகள் கடை அமைத்திருந்தனா். பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

இதேபோல, புத்தாடைகள், இனிப்புகளையும் வாங்கியதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடலூா் உழவா் சந்தைப் பகுதியில் 2 கரும்புகள் கொண்ட ஜோடி ரூ. 30 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் கொத்து தரத்தைப் பொறுத்து ரூ. 20, வாழைத்தாா் (பூவன்) ரூ. 200 முதல் 300, ஒரு சீப் ரூ. 20 முதல் 25 வரை விற்பனையானது.

பூக்களைப் பொறுத்தவரை மல்லிகை கிலோ ரூ. ஆயிரத்துக்கும், காக்கட்டான் ரூ. 800-க்கும் விற்பனையாகின. சாமந்தி கிலோ ரூ. 200-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com