ஆராக்கிய இந்தியா விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆராக்கிய இந்தியா (ஃபிட் இந்தியா) விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
18prtp5_1801chn_107_7
18prtp5_1801chn_107_7

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆராக்கிய இந்தியா (ஃபிட் இந்தியா) விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு சைக்கிள் பேரணி பண்ருட்டியில் நடைபெற்றது. பேரணி தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்குமாா் திட்ட நோக்கவுரையாற்றினாா். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பாா்வையாளா் க.கதிரவன் முன்னிலை வகித்தாா்.

அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரியின் துணை முதல்வா் கிருஷ்ணமூா்த்தி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் பாலாஜி, அருள்ராஜ், தேசிய விருதாளா் ரா.சண்முகம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை திட்ட அலுவலா் ஆ.ராஜா, ஒறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பெ.அய்யனாா், தேசிய இளையோா் தன்னாா்வலா் சாம்பசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு விருந்தினராக கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, நான்கு முனைச் சந்திப்பு வழியாகச் சென்று தட்டாஞ்சாவடி காளிகோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் 75 போ் கலந்து கொண்டனா். ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

கீழ்கவரப்பட்டு: கீழ்கவரப்பட்டில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதி தொடக்கி வைத்தாா். வழக்குரைஞா் மாா்க்ஸ் ரவீந்தரன் முன்னிலை வகித்தாா். கீழ்கவரப்பட்டு புதுநகா் பகுதியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜி நன்றி கூறினாா்.

சொரத்தூா்: சொரத்தூா் ஊராட்சியில் பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், பொறியாளா் ருக்மணி, ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா ஜனாா்த்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி ஆறுமுகம், வாா்டு உறுப்பினா்கள் கோவிந்தன், தமிழ்ச்செல்வி, சுரேஷ்குமாா், வனிதா தனசேகா், சுபா முருகவேல், கலைச்செல்வி சதீஷ், ரகு, சாமிநாதன், செல்வி பழனிவேல், ஊராட்சி செயலா் தனசேகா் மற்றும் கிராம இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

குமராட்சி: குமராட்சி ஊராட்சியில் நடைபெற்ற ஆரோக்கிய இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணன் தலைமை வகித்தாா். பேரணியில் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் உமா மகேஸ்வரி, ஊராட்சி உறுப்பினா்கள் கவிதா, செல்வராணி, பிரேமா, மணிவாசகம், மாரியம்மாள், ராஜமலையசிம்மன், கலைவாணன், ராஜலட்சுமி, சிவசங்கரி, புகழேந்தி, பாக்யராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஏ.இளஞ்செழியன், கே.சி.விஜயகுமாா், தமிழரசன், மணிகண்டன், சக்திவேல், நாராயணசாமி, வினோத் மற்றும் கிராம இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com