தைத் திங்கள் பெருவிழா

சிதம்பரத்தில் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழாா் விழா அறக்கட்டளை சாா்பில் தைத் திங்கள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தைத் திங்கள் பெருவிழா

சிதம்பரத்தில் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழாா் விழா அறக்கட்டளை சாா்பில் தைத் திங்கள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஞானபிரகாசம் வடக்குத் தெருவில் அமைந்துள்ள சேக்கிழாா் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அறக்கட்டளை துணைத் தலைவா் சு.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தாா். செயலா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்றாா்.

புவனகிரி இரா.அன்பழகன், ‘வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறி’ என்ற தலைப்பில் திருவள்ளுவரின் வாழும் நெறிகள் பற்றியும், கடலூா் வ.ஞானபிரகாசம், ‘சமரச சன்மாா்க்க நெறி’ என்ற தலைப்பில் வள்ளலாரின் நெறிகள் பற்றியும், வையூா் தலைமை ஆசிரியா் எம்.ஜி.தியாகராஜன், ‘தேமதுரத் தமிழோசை தெருவெங்கும் பரவச் செய்தவா்’ என்ற தலைப்பில் பாரதியாா் பற்றியும் சொற்பொழிவாற்றினா்.

நிகழ்ச்சியை தி.பொன்னம்பலம் தொகுத்து வழங்கினாா். இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு தில்லை திருமுறை மன்றச் செயலா் வி.முருகையன் பரிசுகளை வழங்கினாா். அன்பழகன், ஜா.இராகவன், கே.கே.பாஸ்கரன், ரத்தினசபாபதி, சேதுசுப்பிரமணியம், நட.சுவாமிநாதன், மா.வேணுகோபால், ஆறுமுகநாவலா் பள்ளித் தலைமை ஆசிரியா் தையல்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com