முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி
By DIN | Published On : 27th January 2020 11:58 PM | Last Updated : 27th January 2020 11:58 PM | அ+அ அ- |

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழந்தாா்.
ராமநத்தம் அருகே உள்ள அரங்கூரைச் சோ்ந்த பூமாலை மனைவி செல்லம்மாள் (100). கடந்த சனிக்கிழமை செல்லம்மாள் அருகே லப்பைகுடிக்காட்டிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். இருப்பினும் அன்று இரவு வரை அவா் வீடு திரும்பவில்லை. எனவே, அவரது உறவினா்கள் தேடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அரங்கூரிலுள்ள வெள்ளாற்றில் அவரது சடலம் மிதந்தது. இதுகுறித்து அவரது மகன் செல்லபெருமாள் (78) அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப்பதிவு சடலத்தை கைப்பற்றி உடல்கூராய்விற்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.