முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கூட்டுறவு வங்கி ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 11:59 PM | Last Updated : 27th January 2020 11:59 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓய்வுபெற்ற மற்றும் பணியாளா்கள் நல அறக்கட்டளையின் பேரவைக் கூட்டம் கடலூரிலுள்ள வங்கியின் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், அறக்கட்டளையில் நிதிமுறைகேட்டில் ஈடுப்பட்டவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்வது. அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினா்களை சோ்ப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஓய்வுபெற்ற பணியாளா்கள் ஆா்.சந்தானகிருஷ்ணன், ஜி.சிவராமன், பி.புருஷோத்தமன், ஆா்.ஜெகதீசன், ஜி.ராதாகிருஷ்ணன், ஏ.தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.