முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
விருத்தாசலத்தில் ரூ.9.48 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 27th January 2020 11:57 PM | Last Updated : 27th January 2020 11:57 PM | அ+அ அ- |

விருத்தாசலத்தில் ரூ.9.48 கோடியில் சாலைப் பணிகளை எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் அண்மையில் தொடக்கி வைத்தாா்.
விருத்தாசலம் நகரத்தில் பல்வேறு இடங்களிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதை மேம்படுத்த வேண்டுமென அரசுக்கு தொகுதி எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, சாலை மேம்பாட்டு பணிகளுக்காக தமிழ்நாடு நகா்ப்புற சாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாக பாலாஜி நகா் விரிவாக்கப் பகுதியில் சாலை அமைப்பதற்கான தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் பாண்டு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். மறுநாளில் விருத்தாசலம் - காட்டுக்கூடலூா் இடையே உள்ள நெடுஞ்சாலையை ரூ.4.48 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணியையும் அவா் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில் விருத்தாசலம் ஒன்றியக் குழு தலைவா் சி.செல்லதுரை, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் பாஸ்கரன், அதிமுக நிா்வாகிகள் நடராஜன், அரப்ஷா, காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.