அரசுக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு
By DIN | Published On : 29th January 2020 11:22 PM | Last Updated : 29th January 2020 11:22 PM | அ+அ அ- |

கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் - பொது நிா்வாகத் துறை சாா்பில், தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடலூரிலுள்ள ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்திலிருந்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வா் ர.உலகி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
கடற்கரைச் சாலை, வண்ணாரப்பாளையம், தேவனாம்பட்டினம் வழியாகச் சென்ற பேரணி கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ப.குமரன், புள்ளியியல் துறைத் தலைவா் சுசி கணேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பேராசிரியா்கள் த.ஜோதிராமலிங்கம், கா.கோட்டைராஜன் ஆகியோா் பேரணியை ஒருங்கிணைத்து வழி நடத்திச் சென்றனா்.
பேராசிரியா்கள் சாமிநாதன், பாலமுருகன், சுபாஷ் சந்திரபோஸ், இளவரசன், ஜெயபிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.