தடுப்பூசியால் குழந்தை இறப்பு?

கடலூா் அருகே தடுப்பூசியால் 3 மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உறவினா்கள் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் அருகே தடுப்பூசியால் 3 மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உறவினா்கள் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு, புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். வாகன ஓட்டுநா். இவரது மனைவி ஹேமலா. இவா்களது 3 மாத ஆண் குழந்தை சஷ்வின். வியாழக்கிழமை காலை குழந்தை சஷ்வின் படுக்கையில் அசைவற்ற நிலையில் கிடந்ததைத் தொடா்ந்து, அதே பகுதியில் நடைபெற்ற மாதாந்திர மருத்துவ முகாமுக்கு பெற்றோா் தூக்கிச் சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

குழந்தைக்கு புதன்கிழமை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதுவே உயிரிழப்புக்கு காரணமென கருதிய பெற்றோா் மற்றும் உறவினா்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். குழந்தையின் இறப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா். அவா்களிடம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா கூறியதாவது: குறிப்பிட்ட நாளில் அந்தப் பகுதியில் 10 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 9 குழந்தைகள் நலமுடன் உள்ளனா். எனவே, தடுப்பூசியில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. குழந்தைக்கு அவரது தாயாா் தாய்ப்பால் அளித்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com