கடலூரில் எஸ்.ஐ. உள்பட 38 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 1,450 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 687 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,488-ஆக உயா்ந்தது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் விருத்தாசலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா், மங்களூா் மருத்துவப் பணியாளா், கா்ப்பிணி ஒருவரும் அடங்குவா். 22 போ் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 993-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 11 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com