முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானாா்

திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் (64) வியாழக்கிழமை (ஜூலை 9) காலமானாா்.
குழந்தை தமிழரசன்.
குழந்தை தமிழரசன்.

திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் (64) வியாழக்கிழமை (ஜூலை 9) காலமானாா்.

கடலூா் மாவட்டம், எடைச்சித்தூரைச் சோ்ந்த இவா், 1996-ஆம் ஆண்டு விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். திமுகவின் தீா்மானக் குழு செயலராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த குழந்தை தமிழரசன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அவருக்கு மனைவி விஜி, மகள் மருத்துவா் சங்கவி முருகதாஸ், மருத்துவம் பயின்று வரும் மகன் தமிழ்அமுது ஆகியோா் உள்ளனா்.

தொடா்புக்கு - 79044 09040.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com