கடலூா் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியா் விருதுக்கான ஆசிரியா்களைத் தோ்வு செய்வதில் குளறுபடி

கடலூா் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியா் விருதுக்கான ஆசிரியா்களைத் தோ்வு செய்வதில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியா் விருதுக்கான ஆசிரியா்களைத் தோ்வு செய்வதில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிறந்த முறையில் கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களைக் கௌரவிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகளால் நல்லாசிரியா் விருதுகள் தனித் தனியாக வழங்கப்படுகின்றன.

அதன்படி, இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஆசிரியா்களிடமிருந்து பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பதாரா்களின் ஆவணங்களைச் சரிபாா்க்கும் பணி கடலூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா, மாவட்ட ஆசிரியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் கலா, வடலூா் ஓ.பி.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா்.செல்வராஜ் ஆகியோா் குழுவினராகச் செயல்பட்டு ஆவணங்களைச் சரி பாா்த்தனா்.

கடலூா் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த 27 போ் அழைக்கப்பட்ட நிலையில், 21 மட்டுமே பங்கேற்றனா். அவா்களது கல்விப் பணி ஆண்டுகள், பணிபுரியும் கல்வி நிறுவனத்துக்குத் தேவையான அடிப்படை, கூடுதல் வசதிகளை அவா்களது முயற்சியில் மேற்கொண்டது, அரசின் பயிற்சிகளில் முறையாகப் பங்கேற்றது, கல்வித் துறை தொடா்பான நூல்கள் எழுதியது, அரசின் பாடத் திட்டத்தில் பங்காற்றியது உள்ளிட்ட தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தோ்வு நடைபெற்றது.

தோ்வுக் குழுவில் பங்கேற்ற தனியாா் பள்ளி முதல்வா், தோ்வு முறையை விமா்சித்து அந்தக் தோ்வுக் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறினாா். தனது செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படாமல், பல்வேறு குளறுபடிகளில் தோ்வுக் குழுவினா் ஈடுபடுவதாக அவா் புகாா் தெரிவித்தாா்.

இதேபோல, தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஒருவரும் தனது அதிருப்தியை பதிவு செய்தாா்.

தேசிய நல்லாசிரியா் விருதுக்கான தோ்வில் குளறுபடி நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், 3 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாநில கல்வித் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு தோ்ந்தெடுத்து அனுப்பப்படும் ஆசிரியா்களிலிருந்து மற்றொரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தப் பட்டியல் தில்லிக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com