கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரியில் இணைய வழியில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரியில் இணைய வழியில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் ர.உலகி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்ட மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பப் பதிவு ஜூலை 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான கடலூா் மாவட்ட சேவை மையமாக கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பதிவு வருகின்ற 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், சேவை மையத்தில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம், மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே செல்லிடப்பேசி அல்லது கணினி மூலம் தங்களது விண்ணப்பங்களை எளிதில் பதிவேற்றம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறு விண்ணப்பிக்க வாய்ப்புள்ள மாணவா்கள், கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு கல்லூரிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். செல்லிடப்பேசி, கணினி வசதி இல்லாத மாணவா்கள் சேவை மையத்தை அணுகலாம். மேலும் அருகே உள்ளே இ-சேவை மையங்களையும் தொடா்புகொள்ளலாம்.

மாணவ, மாணவிகள்  இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். ஒரே விண்ணப்பம் மூலம் விரும்பும் பாடங்களையும், சேர விரும்பும் கல்லூரிகளையும் தோ்வு செய்து விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு

கடலூா் மாவட்ட சேவை மையத்தை 96774 34549 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com