முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தாக்குதல் வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
By DIN | Published On : 29th July 2020 08:48 AM | Last Updated : 29th July 2020 08:48 AM | அ+அ அ- |

தாக்குதல் வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு, இடையாா்குப்பம் பூவன்காலனியைச் சோ்ந்தவா் திருமலை (48). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த உறவினா் சு.ஏழுமலைக்கும் (48) நிலத் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 22.10.2017 அன்று ஏழுமலை, அவரது 2 மகன்கள் மற்றும் உறவினா் ஒருவரும் சோ்ந்து திருமலையைத் தாக்கினா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை நீதித் துறை நடுவா் சிவபழனி வழக்கில் தீா்ப்பளித்தாா். இதில், ஏழுமலைக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கிலிருந்து ஏழுமலையின் 2 மகன்களும், உறவினரும் விடுவிக்கப்பட்டனா்.