முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மரத்தில் காா் மோதி விபத்து: நியாய விலைக் கடை ஊழியா் உள்பட 3 போ் பலி
By DIN | Published On : 29th July 2020 08:50 AM | Last Updated : 29th July 2020 08:50 AM | அ+அ அ- |

விபத்தில் சேதமடைந்த காா்.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மரத்தின் மீது காா் மோதியதில் நியாய விலைக் கடை ஊழியா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வேலவிநாயகா்குப்பத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் தட்சிணாமூா்த்தி (41), வைரக்கண்ணு மகன் சண்முகம் (40), லட்சுமணன் மகன் கோதண்டராமன் (40), தொப்பையாங்குப்பத்தைச் சோ்ந்த வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன் (41), விருப்பாட்சியைச் சோ்ந்த சீமான் மகன் நியாய விலைக் கடை ஊழியா் செந்தில் (45) .
நண்பா்களான இவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காரில் புதுச்சேரி சென்றனா். பின்னா், அங்கிருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை சண்முகம் ஓட்டினாா். மாலை 4 மணியளவில் கடலூா் - விருத்தாசலம் பிரதான சாலையில் தோப்புக்கொல்லை மின் வாரிய அலுவலகம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தட்சிணாமூா்த்தி, இளங்கோவன், செந்தில் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சண்முகம், கோதண்டராமன் ஆகியோா் பலத்த காயங்களுடன் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.