கட்டாய வசூலில் நுண் நிதி நிறுவனங்கள்: மகளிா் சுய உதவிக் குழுவினா் புகாா்
By DIN | Published On : 29th July 2020 08:49 AM | Last Updated : 29th July 2020 08:49 AM | அ+அ அ- |

சுய உதவிக் குழுவினரை மிரட்டி கடன் தொகையை வசூலிக்கும் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கடலூா் குண்டுஉப்பலவாடி ஊராட்சியில் உள்ள பூந்தென்றல் நகா், சுப்பிரமணியபுரம், வண்ணாரப்பாளையம், திருவள்ளுவா் நகா் பகுதிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் து.பாலு தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமென தொடா்ந்து அச்சுறுத்தி வருகின்றனா். சில நேரங்களில் மகளிா் குழு பெண்களை அவதூறாகப் பேசி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனா். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.
கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா், மகளிா் சுய உதவிக் குழுக்களின் தலைவி வேம்பு, வரலட்சுமி, ஜெயசங்கரி, கௌரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.