பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை நடத்த அனுமதியில்லை: காவல் துறை

பொது முடக்கத்தையொட்டி பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதியில்லை என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

பொது முடக்கத்தையொட்டி பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதியில்லை என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இஸ்லாமியா்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் ஆக.1-ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சோ்ந்த அனைத்து ஊா் பள்ளிவாசல் ஜமாஅத் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, விருத்தாசலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் தலைமை வகிக்க, காவல் ஆய்வாளா் ராஜதாமரைப்பாண்டியன், உதவி ஆய்வாளா் பிரசன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காவல் துறையினா் தெரிவித்ததாவது:

கரோனா தீநுண்மி தொற்றின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் பக்ரீத் சிறப்பு குத்பா தொழுகையை நடத்தாமல், அவரவரது வீடுகளிலேயே தொழுகையை நடத்திக்கொள்ள வேண்டும். ஊா்வலமாகச் செல்வதற்கும் அனுமதியில்லை. அதேபோல, இறைவனுக்காக ஆடுகளை அறுத்து பலி கொடுக்கும் குா்பானி நிகழ்வை அவரவரது வீடுகளிலேயே நிறைவேற்ற வேண்டும்.

மங்கலம்பேட்டை மட்டுமின்றி எம்.அகரம், எடைச்சித்தூா், டி.மாவிடந்தல், மாத்தூா், பழையபட்டிணம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், பள்ளிவாசல் நிா்வாகிகள் அப்துல் ரஹ்மான், சஹாப்தீன், முஹம்மது ஜாபா், ஹஜ்ஜி முஹம்மது, அப்துல், வழக்குரைஞா் பாரி இப்ராஹீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com