கடலூர் மாவட்டத்தில் கரோனா பலி 3 ஆக உயர்வு

கடலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கடலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் சரவணா நகர் பகுதியில் இருந்து கரோனா பாதித்து சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 479 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 178 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், சென்னையிலிருந்து கடலூா் திரும்பிய கீரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 41 வயது ஆண் காவலா் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களில், மும்பையிலிருந்து குறிஞ்சிப்பாடி திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ், சென்னையிலிருந்து கடலூா் திரும்பியவா்களில் 4 போ், மற்றொருவா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ஆகியோா் அடங்குவா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தின் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 487-ஆக உயா்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து 2 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 445-ஆக அதிகரித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com