மூப்பனார் பேரவை சார்பில் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் ஊரடங்கை முன்னிட்டு மூப்பனார் பேரவை, த.மா.கா மற்றும் ஜி கே வாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில்
மூப்பனார் பேரவை சார்பில் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் ஊரடங்கை முன்னிட்டு மூப்பனார் பேரவை, த.மா.கா மற்றும் ஜி கே வாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகக் கவசம் உணவு பழங்கள் பிஸ்கட் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மூப்பனார் பேரவை த.மா.கா மற்றும்.ஜி கே வாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் முதியோர்களுக்கு முகக்கவசம் , கபசுரகுடிநீர், மதிய உணவு,  பழங்கள், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள்வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம் என் ராதா தலைமை வகித்தார். ஜி.கே.வாசன் நற்பணி இயக்க நிறுவனர் எஸ் முத்துகுமார் வரவேற்றார். 

நகர த.மா.கா  பொதுச்செயலாளர்கள் ஆட்டோ டி .குமார்,  டி.பட்டாபிராமன். சிறுபான்மைப் பிரிவு ஸ்டீபன், முத்துப்பாண்டி வாசன் நற்பணி இயக்க செயலாளர் பி.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மா.கா மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் ஜெயச்சந்திரன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு முகக்கவசம், மதிய உணவு மற்றும் பழம் பிஸ்கட் நிவாரண பொருட்களை வழங்கினார். 

நகர த.மா.கா மூத்த துணைத்தலைவர் ஆர் சம்பந்தமூர்த்தி  அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் எம்.ஜி .ராஜராஜன் ஆகியோர் 100 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில மருத்துவ பிரிவு மண்டல செயலாளர் டாக்டர் ஆர் வீரவேல், மாவட்டச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.துரைசாமி, ஏ.ராஜசேகர், ரகு, அம்பலவாணன் ,ரவி, ஸ்ரீதர், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியின் முடிவில் ஜி கே வாசன் நற்பணி இயக்க பொருளாளர் எஸ் செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com