செல்போன் பயன்படுத்தி வந்ததை தாய் கண்டித்ததால், சிதம்பரத்தில் பள்ளி மாணவி தற்கொலை

சிதம்பரம் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிதம்பரம் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மன்னார்குடிதெருவை சேர்ந்தவர் குஞ்சிதபாதம் மகள் மஞ்சு வயசு 15. இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்கிறார். கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் இணைய வழி கல்வி மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மஞ்சு இணையவழி பாடத்தை செல்போனில் படிக்காமல் வீட்டில் செல்போனை கையில் வைத்துக் கொண்டு கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரி கண்டித்துள்ளார். இந்நிலையில் தாய் பரமேஸ்வரி அருகே உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது இதனால் மனமுடைந்த மஞ்சு வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கடைக்கு சென்று திரும்பி வந்த தாய் பரமேஸ்வரி கதவு அடைத்திருந்தது. ரகதவை திறந்து பார்த்தபோது மகள் மஞ்சு மின்விசிறியில் தூக்கு போட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரது தாய், உறவினர்கள் உடனே மஞ்சுவை அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் மஞ்சு ஏற்கனவே இறந்து வட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மஞ்சுவின் தாய் பரமேஸ்வரி சிதம்பரம் நகர காவல் நிலைத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com