குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

தமிழகத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில அரசுகளின் அதிகாரத்துக்குள்பட்ட கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை ரூ.4.75 லட்சம் கோடியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதேபோல, நாட்டில் உள்ள கனிம வள சுரங்கங்களை தனியாருக்கு அளிக்கவும் அவசரச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. சென்னையில் இருந்த நோய் பாதிப்பு தற்போது மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. கேரள அரசைப் போல பாரம்பரிய மருத்துவ முறைகளை இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்த வேண்டும். இது நல்ல பலனை அளிப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுத்தாா். கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக தமிழக முதல்வா் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தமிழகத்தில் ரூ.400 கோடிக்கு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றதாக முதல்வா் கூறுவது வெறும் கண்துடைப்பு. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com