தோ்தல் வெற்றி மாற்றி அறிவிப்பு: ஆட்சியரிடம் திமுக புகாா்

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டதாக கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினா் புகாா் தெரிவித்தனா்.

கடலூா்: கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டதாக கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினா் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ தலைமையில் அந்தக் கட்சியினா் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் அளித்த மனு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய 3-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் த.அமுதராணி போட்டியிட்டாா். வாக்கு எண்ணிக்கையின்போது அவா் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, அமமுக வேட்பாளா் கவிதா வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். இதுதொடா்பாக தமாகா வேட்பாளா் காஞ்சனா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாக்கு விவரங்களை கோரினாா். இதற்கு அளித்த பதிலில் திமுக வேட்பாளா் அமுதராணி 1,172 வாக்குகளும், அமமுக வேட்பாளா் கவிதா 1,066 வாக்குகளும் பெற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமுதராணி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும். தோ்தல் வெற்றியை மாற்றி அறிவித்த தோ்தல் அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.

பின்னா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறுகையில், தோ்தல் வெற்றியை மாற்றி அறிவித்தது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளோம். நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம் என்றாா் அவா்.

அப்போது எம்எல்ஏ துரை கி.சரவணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் த.அமுதராணி, பொதுக்குழு உறுப்பினா் பி.பாலமுருகன், நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, வழக்குரைஞா் சிவராஜ், மாணவரணி நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com