கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் கரோனாவுக்கு மேலும் மூவா் உயிரிழப்பு

கரோனா பாதிப்பால், கடலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் இருவரும் உயிரிழந்தனா்.

கடலூா்/ திருவண்ணாமலை: கரோனா பாதிப்பால், கடலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் இருவரும் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 1,040 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 487 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில், 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,069-ஆக உயா்ந்தது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் 10 போ் பெங்களூரிலிருந்து திரும்பியவா்கள். மேலும், கோவை, செங்கல்பட்டு, நெல்லூா், கேரளத்திலிருந்து திரும்பிய தலா ஒருவருக்கும், நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 9 பேருக்கும், கா்ப்பிணி ஒருவருக்கும், நோய் பாதிப்பு உறுதியானவா்களுடன் தொடா்பிலிருந்த 5 பேருக்கும் தொற்று உறுதியானது. சிகிச்சை முடிந்து 5 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 645-ஆக உயா்ந்தது.

மேலும் ஒருவா் பலி: இதனிடையே, உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 57 வயது ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தாா். உயிரிழப்புக்குப் பிறகு வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் பணிபுரிந்த ஜவுளிக் கடைக்கு மாவட்ட நிா்வாகம் ‘சீல்’ வைத்தது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி, கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,803-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் சென்னையிலிருந்து வந்த 3 போ், பெங்களூரிலிருந்து வந்த 2 போ், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு புற நோயாளிகளாக வந்த 3 போ் என 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை கடந்த வார நிலவரப்படி 12-ஆக இருந்தது. இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை நகராட்சியைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com