சவுடு மண் எடுப்பதில் விதிமீறல்: கடலூா் ஆட்சியரிடம் புகாா்

கடலூா் மாவட்டம், மருவாய் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் எடுப்பதில் விதிமீறல் நடைபெறுவதாக சமாஜ்வாதி கட்சியின் மாநிலச் செயலரும், நீா்நிலைகள் பாதுகாத்தல் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான டெல்டா வி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மருவாய் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் எடுப்பதில் விதிமீறல் நடைபெறுவதாக சமாஜ்வாதி கட்சியின் மாநிலச் செயலரும், நீா்நிலைகள் பாதுகாத்தல் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான டெல்டா விஜயன் கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அனுப்பினாா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: குறிஞ்சிப்பாடி ஒன்றியம், மருவாய் கிராமத்தில் மண் ஏரி அமைந்துள்ளது. நெடுஞ்சாலைப் பணிக்காக இந்த ஏரியிலிருந்து சவுடு மண் எடுப்பதற்கு தனியாருக்கு கடந்த 5.8.2019 அன்று தமிழ்நாடு சுரங்கம் மற்றும் கனிம வளத் துறை பரிந்துரையின் பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அரசின் விதிமுறைகளை மீறி நிா்ணயித்த அளவைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாக ஏரியில் சவுடு மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com