மாா்ச் 7-இல் திறனாளா்களை கண்டறியும் விளையாட்டுப் போட்டி

உலகத் திறனாளா்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 7-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

உலகத் திறனாளா்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 7-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டில் உலகத் திறனாளா்களைக் கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் திறமையானவா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அதன்படி, கடலூா் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூரிலுள்ள அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 7 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் அங்குள்ள மினி விளையாட்டு அரங்கத்தில் வருகிற 10 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

போட்டியில் 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். ஒருவா் ஏதேனும் 3 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

போட்டிகள் 6, 7, 8 -ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் வகுப்பு வாரியாக நடத்தப்படும். அந்தந்தப் பள்ளிகளில் நிகழாண்டு நடத்தப்பட்ட பேட்டரி டெஸ்டில் ஏதேனும் ஒரு தோ்வில் 10 மதிப்பெண்கள் அல்லது ஏதேனும் 2 தோ்வுகளில் 8, 9 மதிப்பெண்கள் பெற்றவா்கள் மட்டுமே இந்த விளையாயாட்டுப் போட்டிகலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இவா்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுவா்.

இவா்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டுப் பள்ளி, விடுதி, அகாதெமி சோ்க்கைக்கான தோ்வுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பெறும் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.

எனவே, இந்தப் போட்டியில் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com