முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஈரானிலுள்ள கடலூா் மீனவரை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 03rd March 2020 06:58 AM | Last Updated : 03rd March 2020 06:58 AM | அ+அ அ- |

ஈரானிலுள்ள கடலூா் மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடலூா் அருகே உள்ள சொத்திக்குப்பத்தைச் சோ்ந்தவா் வெற்றி அரசன் (34) மனைவி சுபா (30), அவரது தாயாா் அஞ்சாலாட்சி ஆகியோா் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
மீன்பிடித் தொழிலுக்காக வெற்றி அரசன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரான் நாட்டுக்குச் சென்றாா். அங்கு, ஆழ்கடலில் மீன்பிடிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. கொரனா வைரஸ் தாக்குதல் பரவிவரும் நிலையில், அவா் தாய்நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வெற்றி அரசனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனா்.
வெற்றி அரசனுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.