முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஒரே நாளில் 95 உத்தரவுகள் ரத்து: ஓய்வுபெற்ற அதிகாரி மீது குற்றச்சாட்டு
By DIN | Published On : 03rd March 2020 07:00 AM | Last Updated : 03rd March 2020 07:00 AM | அ+அ அ- |

ஒரே நாளில் 95 உத்தரவுகளை ரத்து செய்தது தொடா்பாக ஓய்வுபெற்ற டாஸ்மாக் அதிகாரி மீது விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளா்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவா்களுக்கு அரசுத் துறையில் மாற்றுப் பணியிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினோம். பின்னா், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை பிப்.11-ஆம் தேதி சந்தித்து மனு அளித்தோம். அப்போது, கடைகளில் முறையற்ற ஆய்வு நடைபெறுவதாக நாங்கள் புகாா் கூறியதால், அதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே மனுவை பெற்றுக்கொள்வதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து மறுநாளே உரிய ஆதாரத்துடன் மனு அளித்தோம்.
அதேநேரத்தில், கடலூா், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, கரூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல மேலாளா் கடந்த பிப்.29- ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். அவா் பல்வேறு கட்டங்களாக வெளியிட்ட 95 உத்தரவுகளை பிப்.27-ஆம் தேதி ஒரே நாளில் ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளாா். இதில், நாங்கள் குறிப்பிட்ட முறையற்ற ஆய்வு, பணியாளா்கள் இடமாறுதல் ஆகியவையும் அடங்கும். இதற்கு எவ்வாறு மேலாண்மை இயக்குநா் அனுமதி அளித்தாா்?
இதனால், பணிமாறுதல் பெற்ற ஊழியா்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி பணியாளா்களுக்கு எதிரான உத்தரவுகளை ரத்து செய்வதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.