முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
வகுப்பறை கட்டட அடிக்கல் நாட்டு விழா
By DIN | Published On : 03rd March 2020 06:57 AM | Last Updated : 03rd March 2020 06:57 AM | அ+அ அ- |

பெரியகாட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வு திட்டம் மூலம் இந்தப் பள்ளியில் ரூ.30.62 லட்சத்தில் முதல் கட்டமாக 3 வகுப்பறைகளை கட்ட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட முதன்மை பொது மேலாளா் ஆா்.மோகன் முன்னிலையில், நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டி கட்டடப் பணியை தொடக்கி வைத்தாா் (படம்).
நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியா் முருகவேல், மாவட்ட கவுன்சிலா் ஜெகநாதன், பண்ருட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவா் தேவகி ஆடலரசன், என்எல்சி பொது மேலாளா் ராமச்சந்திரன், துணைப் பொது மேலாளா் அஷோக்குமாா், முதன்மை மேலாளா் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.