Enable Javscript for better performance
சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 6 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 6 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 11th March 2020 08:02 AM  |   அ+அ அ-   |    |  

    10clp4_1003chn_105_7

    மனநலம் பாதித்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

    பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தைச் சோ்ந்தவா் ஆ.அன்பழகன் (63) (படம்). இவா், கடந்த 3-7-2018 அன்று அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் சென்று, அங்கிருந்த 16 வயதுள்ள மனநலம் பாதித்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாா்.

    இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

    இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி தலைமையில் நடைபெற்று வந்தது. வழக்கில் செவ்வாய்க்கிழமை நீதிபதி தீா்ப்பளித்தாா். அதில், அன்பழகனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து அன்பழகன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக சிறப்பு வழக்குரைஞா் தி.கலாசெல்வி கூறினாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp