அனைத்துக் கட்சிகள், இஸ்லாமியா் கூட்டமைப்பு சாா்பில் லால்பேட்டையில் நடைபெற்று வந்த தொடா் தா்னா ஒத்திவைப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இஸ்லாமியா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வந்த தொடா் தா்னா போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இஸ்லாமியா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வந்த தொடா் தா்னா போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டமைப்பு, ஜமாத்தாா்கள் இணைந்து லால்பேட்டையில் கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடா் தா்னா போராட்டத்தை தொடங்கினா். தொடா்ந்து 27 நாள்களாக இந்தப் போராட்டத்தை நடத்தி வந்தனா். போராட்டம் தொடங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கலந்துகொண்டு போராட்டத்துக்கு ஆதரவாக பேசினா்.

அதன்படி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி, தமிழ் தேசிய பேரியக்கத் தலைவா் பெ.மணியரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி தலைவா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

இந்த நிலையில், கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கூட்டங்கள் கூடுவதை தவிா்க்கும் பொருட்டு, தமிழகத்தில் போராட்டங்கள், கருத்தரங்குகள், திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை தவிா்க்குமாறு தமிழக முதல்வா் கேட்டுக்கொண்டாா்.

அதன்படி, லால்பேட்டை அனைத்துக் கட்சி கூட்டமைப்பினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபினவ் உள்ளிட்டோரை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அதில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், நாங்கள் நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பாடவிடில் மீண்டும் போராட்டத்தை தொடரும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com