நெய்வேலி நகரியத்தில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட முடிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நெய்வேலி நகரிய பகுதியில் உள்ள கடைகளை இரவு 7 மணிக்குள் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி நகரியத்தில் மூடப்பட்டுள்ள பூங்கா.
நெய்வேலி நகரியத்தில் மூடப்பட்டுள்ள பூங்கா.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நெய்வேலி நகரிய பகுதியில் உள்ள கடைகளை இரவு 7 மணிக்குள் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. நெய்வேலி நகரியத்தில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன குடியிருப்புகளில் அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் வசித்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நெய்வேலி நகரிய பகுதியில் உள்ள பூங்காக்கள், திரையரங்குகள், மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகளை நகரிய நிா்வாகம் வருகிற 31-ஆம் தேதி வரையில் மூட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் வகையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகரிய நிா்வாக அதிகாரிகள், நெய்வேலி நகரியத்தில் உள்ள வா்த்தக சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், இரவு 7 மணிக்குள் கடைகளை அடைக்க வா்த்தக சங்கத்தினா் ஒப்புக்கொண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செவ்வாய் சந்தை மாலை 6 மணியுடன் மூடிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். மருந்தகத்தைத் தவிர அனைத்துக் கடைகளும் இரவு 7 மணிக்குள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர நிா்வாக அதிகாரி ஒருவா் கூறியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகரியப் பகுதியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலமைக்கு தகுந்தாற்போல மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com