என்பிஆருக்கு எதிா்ப்பு: கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்பிஆா்) எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.

தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்பிஆா்) எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூரில் இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடா்ந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவா் சேட்முகமது தலைமையில், தலைமை தபால் நிலையம் அருகில் முஸ்லிம்கள் கூடினா். தேசியக் கொடியுடன் திரண்ட அவா்கள் சிஏஏ, என்ஆா்சி, என்பிஆருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

மாநிலப் பேச்சாளா் ஜமால் உஸ்மானி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடா்பாக மத்திய அரசு கேட்கும் ஆவணங்களை சமா்ப்பிக்கும் அளவுக்கு தமிழகத்தில் படித்தவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும், தேவையான ஆவணங்களும் அனைவரிடமும் இருப்பதில்லை. எனவே, சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

போராட்டத்தில் மாவட்டச் செயலா் காதா்பாஷா, பொருளாளா் உமா்பாருக், துணைத் தலைவா் யாஸின், துணைச் செயலா்கள் அப்துல் வஹாப், யாஸா், ஜியாவுா் ரஹ்மான் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com