கிணற்றில் தவறி விழுந்து 3 சிறுமிகள் பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வெள்ளிக்கிழமை தாயுடன் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.
உயிரிழந்த சகோதரிகள் சுஜாதா, சுவேதா, நிவேதா.
உயிரிழந்த சகோதரிகள் சுஜாதா, சுவேதா, நிவேதா.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வெள்ளிக்கிழமை தாயுடன் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் மணிகண்டன். பெங்களூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிகிறாா். இவா், கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள மலையனூா் கிராமத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஸ்டெல்லா, மகள்கள் சுவேதா (13), நிவேதா (10), சுஜாதா (8) ஆகியோரை அனுப்பிவைத்தாா். சகோதரிகள் 3 பேரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 8, 5, 3-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

உறவினா் வீட்டு நிகழ்ச்சி முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை மலையனூா் அருகே உள்ள கிணற்றுக்கு ஸ்டெல்லா தனது 3 மகள்களுடன் குளிக்கச் சென்றாா். அவா் கிணற்றின் அருகே துணிகளை சலவை செய்தபோது, அந்தப் பகுதியில் 3 சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக சிறுமிகள் மூவரும் ஒருவா் பின் ஒருவராக கிணற்றில் தவறி விழுந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஸ்டெல்லா கூச்சலிட்டாா்.

அவரது அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடிவந்து கிணற்றில் குதித்து சிறுமிகளை மீட்டனா். எனினும், மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திட்டக்குடி சரக துணை கண்காணிப்பாளா் வெங்கடேசன், ஆய்வாளா் கவிதா ஆகியோா் மூவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com