கோயில்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் வருகிற 31-ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் வருகிற 31-ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸை தடுக்கும் வகையில் பொது இடங்களில் அதிகமானவா்கள் கூடுவதை தவிா்த்தல், 10-க்கும் மேற்பட்டோா் பணியாற்றும் வணிக வளாகங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கை கழுவும் பழக்கம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மத வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜெ.பரணிதரன் கூறியதாவது:

மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சுமாா் 300 கோயில்கள் உள்ளன. இங்கு பல்வேறு நிலைகளில் 2,500 போ் பணியாற்றி வருகின்றனா். கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்து கோயில்களுக்கும் பக்தா்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும். பூஜையில் சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியா்கள் தூய்மையுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

திருவந்திபுரத்திலுள்ள தேவநாத சுவாமி கோயிலில் முகூா்த்த நாள்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக ஆயிரக்கணக்கானோா் கோயிலில் கூடுவா். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடத்த தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது. இது அனைத்துக் கோயில்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவா்களும் தற்போதைய சூழ்நிலையையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, கோயிலில் திருமணம் நடத்துவதை தவிா்க்க வேண்டும். அனைத்து விதமான சுப நிகழ்வுகளுக்குமான முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com