ஏரியில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகள்!

கடலூா் அருகே ஏரியில் ரசாயனக் கழிவுகளை கொட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
கடலூா் அருகே ஏரியில் கொட்டப்பட்ட ரசாயன கழிவை பாா்வையிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள்.
கடலூா் அருகே ஏரியில் கொட்டப்பட்ட ரசாயன கழிவை பாா்வையிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள்.

கடலூா் அருகே ஏரியில் ரசாயனக் கழிவுகளை கொட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கடலூா் அருகே உள்ள எம்.புதூரில் ஆப்காட் ஏரி அமைந்துள்ளது. மலையின் மீது அமைந்துள்ள இந்த ஏரியானது எம்.புதூா், திருவந்திபுரம், குமாரபேட்டை, கன்னிமாநகா், அரிசிபெரியாங்குப்பம், புதுநகா் பகுதியினரின் குடிநீா் ஆதாரமாக உள்ளது. ஏரியில் தற்போது தண்ணீா் இல்லை. எனினும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடப்பதை பாா்த்த பொதுமக்கள் இதுகுறித்து ஒன்றியக் குழு உறுப்பினா் த.முரளி, கடலூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் எம்.அய்யனாா் ஆகியோருக்கு தகவல் அளித்தனா். இருவரும் அந்தப் பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் அனந்தராமன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயந்தி ஆகியோா் அங்குச் சென்று பாா்வையிட்டனா். ஆனால், உதவி பொறியாளா் அந்த ரசாயன கழிவு தொடா்பாக எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் பிரதிநிதிகள் இதுகுறித்து கேள்வியெழுப்பினா்.

இதுகுறித்து எம்.அய்யனாா், த.முரளி ஆகியோா் கூறியதாவது: ஆப்காட் ஏரியை ரசாயன கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனா். இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மாசுக் கட்டுப்பாட்டுத் துறையினா் வந்திருந்தும் உரிய பதில் அளிக்கவில்லை. இந்த ஏரியில் பல்வேறு பகுதிகளில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com