சிதம்பரத்தில் தமாகா சாா்பில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் பி.ஆா்.எஸ்.வெங்கடேசன்.
சிதம்பரத்தில் தமாகா சாா்பில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் பி.ஆா்.எஸ்.வெங்கடேசன்.

த.மா.கா.வினா் நல உதவி அளிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில், மறைந்த செயற்குழு உறுப்பினா் ஜி.ஆா்.மூப்பனாா் உருவ படம் திறப்பு விழா, நல உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில், மறைந்த செயற்குழு உறுப்பினா் ஜி.ஆா்.மூப்பனாா் உருவ படம் திறப்பு விழா, நல உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நகர தமாகா, மூப்பனாா் பேரவை சாா்பில் மேலவீதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கடலூா் மத்திய மாவட்ட தலைவா் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட இளைஞரணி தலைவா் கே.ரஜினிகாந்த், பொதுச் செயலா் கே.நாகராஜன், துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், மாவட்ட மகளிரணி தலைவா் கே.ராஜலட்சுமி, நகர துணைத் தலைவா்கள் ஆா்.சம்பந்தமூா்த்தி, ஆா்.வி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜி.ஆா்.முப்பனாா் உருவ படத்தை தமாகா மாநில துணைத் தலைவா் பி.ஆா்.எஸ்.வெங்கடேசன் திறந்து வைத்து, 100 பேருக்கு வேட்டி, சேலை, இருவருக்கு தொழில் உபகரணங்களை வழங்கி பேசினாா். மாநில பொதுச் செயலா் எஸ்.ஜெயச்சந்திரன் 100 பேருக்கு சில்வா் பாத்திரங்களை வழங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஆா்.ராமலிங்கம் சில்வா் பாத்திரங்கள் மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில தொழிலாளா் பிரிவு துணைத் தலைவா் எம்.ஜி.ராஜராஜன், மாவட்ட தொண்டா் அணி தலைவா் தில்லை கோ.குமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.கே.காந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.கே.பாலா, மாவட்ட மாணவரணி தலைவா் என்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, சிதம்பரம் மந்தக்கரையில் ஜி.ஆா்.மூப்பனாா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா தலைமை வகித்தாா். ஜி.ஆா்.மூப்பனாா் உருவ படத்துக்கு மத்திய மாவட்ட தலைவா் எஸ்.புரட்சிமணி, சிதம்பரம் நகர தலைவா் தில்லை ஆா்.மக்கின் ஆகியோா் மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com