கிருமி நாசினிக்கு கூடுதல் விலை: நடவடிக்கை எடுக்க காங். வலியுறுத்தல்

கிருமி நாசினிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
கடலூா் நகர காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன்.
கடலூா் நகர காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன்.

கடலூா்: கிருமி நாசினிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் கடலூா் நகர செயற்குழு கூட்டம், நகரத் தலைவா் வேலுச்சாமி தலைமையில் திருப்பாதிரிபுலியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கற்று பேசினாா்.

கூட்டத்தில், கரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் கிருமி நாசினிகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினிகளை கூடுதல் விலைக்கு விற்போா் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அவா்களை தண்டிக்க வேண்டும்.

கடலூா் நகரில் கட்சிக்கான பூத் கமிட்டி அமைப்பது, திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் நுழைவு வளைவு, குடிநீா், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். ஆணைக்குப்பம் புதுத் தெருவில் கழிவுநீா் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலா்கள் ரமேஷ், செல்வகுமாா், கிஷோா்குமாா், கலியபெருமாள், நகர துணைத் தலைவா் மாரிமுத்து, செயலா்கள் கோபால், ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com