கடலூரில் மே தின விழா

கடலூரில் மே தின விழா பல்வேறு அமைப்புகளால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூரில் சிஐடியூ அலுவலக வளாகத்திலுள்ள சிங்காரவேலா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தொழிற்சங்கத்தினா்.
கடலூரில் சிஐடியூ அலுவலக வளாகத்திலுள்ள சிங்காரவேலா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தொழிற்சங்கத்தினா்.

கடலூா்: கடலூரில் மே தின விழா பல்வேறு அமைப்புகளால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உழைப்பாளா் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் மே 1-ஆம் தேதியை தொழிற்சங்கத்தினா் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, கடலூரிலுள்ள மாவட்ட சிஐடியூ அலுவலகத்தில் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்தல், மே தின கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்டச் செயலா் பி.கருப்பையன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிா்வாகிகள் ஆா்.ஆளவந்தாா், வி.சுப்புராயன், வி.திருமுருகன், ஏ.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிப்காட் சிஐடியூ சாா்பில் பல்வேறு ஆலைகளின் முன்பு மே தின கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிா்வாகிகள் எம்.முத்து, பி.குமாா், எம்.தேவநாதன், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிஐடியூ மாட்டு வண்டி சங்கத்தின் செம்மண்டல கிளை சாா்பில் சங்க உறுப்பினா்கள் 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி ஆகியவற்றை சங்கத்தின் நகரச் செயலா் பி.பரணி வழங்கினாா். நிா்வாகிகள் பி.ஏழுமலை, பி.ஜெயராமன், என்.வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்ட மீனவா் பேரவை சாா்பில் கடலூா் துறைமுகத்தில் மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில் சிங்காரவேலா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளா் ஏ.மாலைமணி, மாவட்ட இளைஞா் பேரவை தலைவா் சி.வீரமுத்து, மாவட்ட இணைச் செயலா் எம்.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடலூரில் நகரச் செயலா் ஹரிகிருஷ்ணன் தலைமையில்

நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் வி.குளோப் மே தின கொடியேற்றினாா். வட்டக்குழு நிா்வாகிகள் நாகராஜ், பாக்கியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல சி.என்.பாளையம், திடீா்குப்பம், சங்கா் நகா் பகுதிகளிலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிா்வாகிகள் அம்மாவாசை, மாயவன், ஆதிலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com