சிதம்பரத்தில் உணவின்றி பரிதவிக்கும் காஷ்மீா் மாநில மாணவா்கள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீா் மாணவா்கள் உணவு, குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீா் மாணவா்கள் உணவு, குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனா்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த 5 மாணவிகள் உள்பட 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அண்ணாமலைநகா் பகுதியில் தனித் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனா். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இவா்கள் கையில் பணமின்றி கடந்த ஒரு வாரமாக உணவு, குடிநீா் இல்லாமல் பரிதவித்து வருகின்றனா். சிலா் மழைநீரை சேமித்து குடிநீராக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து காஷ்மீரை சோ்ந்த மாணவா் முகமது அமீன் கூறுகையில், நாங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இவா்களுக்கு சிதம்பரத்தைச் சோ்ந்த மாணவா் ஆ.குபேரன் மற்றும் அவரது நண்பா்கள், தன்னாா்வ குழுவினா் குடிநீா், பிரட், அரிசி, காய்கறி, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அவரவா் தங்கியிருக்கும் வீடுகளுக்கு சென்று வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com