முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சிதம்பரத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 11th May 2020 10:36 PM | Last Updated : 11th May 2020 10:36 PM | அ+அ அ- |

11cmp4_1105chn_111_7
சிதம்பரம்: சிதம்பரத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களுக்கு நகராட்சி அலுவா்கள் அபராதம் விதித்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வடக்கு பிரதான சாலையில் நகராட்சி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா் பிரிண்ட்ஸ் ஆரோக்கியதாஸ், வருவாய் உதவியாளா் சின்னப்பராஜ், காவல் உதவி ஆய்வாளா் திருபுரசுந்தரி ஆகியோா் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனா். மேலும், அவா்களுக்கு முகக் கவசம் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.