இயல்புநிலைக்கு திரும்பிய சிதம்பரம் நகரம்: கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததால் அச்சத்தில் மக்கள்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால், சிதம்பரம் நகரம் இயல்புநிலைக்கு திரும்பியது. 
இயல்புநிலைக்கு திரும்பிய சிதம்பரம் நகரம்: கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததால் அச்சத்தில் மக்கள்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால், சிதம்பரம் நகரம் இயல்புநிலைக்கு திரும்பியது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் கரோனா தொற்று பரவாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் கடந்த 50 நாட்களாக சிதம்பரம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கடந்த மே 19-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வு உள்ள கடைகள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் சிதம்பரம் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டன. உள்ளூர் வாகனங்களான கார்கள் மற்றும் சில ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. இதனால் சிதம்பரம் நகரம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. 

பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. குறிப்பாக கரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சமின்றி மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று பொருள்கள் வாங்குகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சி.டி.அப்பாவு தெரிவித்தது: சிதம்பரம் மேலரதவீதி, காசுக்கடைத்தெரு, வேணுகோபால் பிள்ளைத்தெரு, தெற்குரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று பொருள்கள் வாங்குகின்றனர். 

தெற்குரதவீதியில் மெட்ரோ வணிக வளகாம் உள்ளிட்ட பெரிய மளிகைகடைகள் திறக்கப்பட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். மேலரதவீதியில் மிகப்பெரிய துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவையல்லாமல் காலை வேளையில் மேலரதவீதி, காசுக்கடைத்தெருவில் சாலையோர காய்கறி கடைகள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம். கூட்டமாக நின்று பொருள்கள் வாங்கும் நிலை உள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை பொதுமக்கள் யாரும் பின்பற்றுவதில்லை. 

மேலும் முகக்கவசம் அணியாமல் பலர் நகரில் வலம் வருகின்றனர். நகராட்சி சார்பில் பெயரளவிற்கே முகக்கவசம் அணியாதவர்களை பிடித்து அபாரதாம் விதிக்கின்றனர். இதனால் சிதம்பரம் நகரில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது என்கிறார் சி.டி.அப்பாவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com